அருள் விக்னேஷ் மீது புகார் கொடுத்தது முதல்வருக்குத் தெரியுமா? தெரியாதா? மு.க. ஸ்டாலின் கேள்விகார்த்திகை தீபம்! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தாமிரக் கொப்பரை!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! விசாரணை நவ. 27-க்கு ஒத்திவைப்பு!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை!யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்! எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கில் நீதிபதி கருத்து!ஆபாச குறுஞ்செய்தி: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வீட்டிற்கு போலீசார் வருகை!கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாரில் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு! காவல்துறை பதில்!மதுரையில் 144 தடை! ஆட்சியர், காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (நவ. 24) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைப்பு!‘கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்!இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்!வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 3ஆவது தங்கம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு, பளுதூக்குதலில் மேலும் ஒரு தங்கமும், ஜூடோவில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலமும் கிடைத்துள்ளன. 

Updated On :

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு, பளுதூக்குதலில் மேலும் ஒரு தங்கமும், ஜூடோவில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலமும் கிடைத்துள்ளன. 

இத்துடன் இந்தியா, 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் 6-ஆவது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. 

இதில் 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் பளுதூக்குதலில் கிடைத்தவையாகும். 
பளுதூக்குதல்: இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆடவருக்கான 73 கிலோ பளுதூக்குதலில் இந்தியாவின் அசிந்தா ஷியுலி, ஸ்னாட்சில் 143 கிலோ, கிளீன் & ஜெர்க்கில் 170 கிலோ என மொத்தமாக 313 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்தார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் தூக்கிய 143 கிலோவும், ஒட்டுமொத்த எடையான 313 கிலோவும் காமன்வெல்த் போட்டி சாதனைகளாகும். மலேசியாவின் எர்ரி ஹிதாயத் முகமது 303 கிலோவுடன் (138+165) வெள்ளியை வெல்ல, கனடாவின் ஷாத் டார்சிக்னி 298 கிலோவுடன் (135+163) வெண்கலப் பதக்கம் பெற்றார். 

நூலிழையில்...: 

ஆடவருக்கான 81 கிலோ பிரிவில் இந்தியரான அஜய் சிங், 1 கிலோ வித்தியாசத்தில் வெண்கலப் பதக்க வாய்ப்பைத் தவறவிட்டார். அவர் 319 கிலோ எடையைத் தூக்கி (143+176) நான்காம் இடம் பிடித்தார். மகளிருக்கான 59 கிலோ பிரிவில் களம் கண்ட பாபி ஹஸôரிகா, 183 கிலோவுடன் (81+102) ஏழாம் இடமே 
பிடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.