சொந்த மண்ணில் 100 டெஸ்டுகளை விளையாடும் முதல் வீரர் என்கிற புதிய சாதனையைப் படைத்துள்ளார் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், மான்செஸ்டரில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இந்த டெஸ்டில் விளையாடும் 40 வயது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், சொந்த மண்ணில் 100 டெஸ்டுகளை விளையாடும் முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். இது அவர் விளையாடும் 174-வது டெஸ்ட்.
சொந்த மண்ணில் அதிக டெஸ்டுகள்
ஆண்டர்சன் - 100 டெஸ்டுகள்
சச்சின் - 94 டெஸ்டுகள்
பாண்டிங் - 92 டெஸ்டுகள்
பிராட் - 91 டெஸ்டுகள்
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிரணாய் காலிறுதிக்குத் தகுதி
2023 ஒருநாள் உலகக் கோப்பையில் நிச்சயம் விளையாடுவேன்: டிரெண்ட் போல்ட்
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா நெவால் தோல்வி
கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடும் ஷுப்மன் கில்
சென்னை செஸ் ஒலிம்பியாடில் விளையாடிய ஹரிகாவுக்குப் பெண் குழந்தை!