பிரபல நியூசிலாந்து வீரர் ஓய்வு அறிவிப்பு

நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் காலின் டி கிராண்ட்ஹோம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
பிரபல நியூசிலாந்து வீரர் ஓய்வு அறிவிப்பு

நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் காலின் டி கிராண்ட்ஹோம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இனிமேலும் நான் இளமைக்குத் திரும்ப முடியாது. காயத்தில் இருக்கும்போது பயிற்சிகள் கடினமாக உள்ளன. எனக்குக் குடும்பம் உள்ளது. கிரிக்கெட்டுக்குப் பிறகான வாழ்க்கை குறித்து புரிந்துகொள்ள முயல்கிறேன். இவையெல்லாம் கடந்த சில வாரங்களாக என் மனத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன. 2012 முதல் நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகிறேன். விடைபெற இதுவே சரியான தருணம் என எண்ணுகிறேன் என ஓய்வு அறிவிப்பு குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்  கிராண்ட்ஹோம். 

சமீபத்தில் பிபிஎல் போட்டிக்காக அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு கிராண்ட்ஹோம் தேர்வானார். அப்போது, தங்களிடம் இதுகுறித்து அனுமதி எதுவும் பெறவில்லை என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பு தெரிவித்தது. இந்நிலையில் தற்போது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கிராண்ட்ஹோம். 

நியூசிலாந்து அணிக்காகக் கடந்த 10 வருடங்களில் 115 சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் கிராண்ட்ஹோம் விளையாடியுள்ளார். 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றில் வென்ற நியூசிலாந்து அணியிலும் 2019 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டத்திலும் கிராண்ட்ஹோம் இடம்பெற்றார். ஜிம்பாப்வேயில் பிறந்த கிராண்ட்ஹோம், 2006-ல் நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்தார். ஜிம்பாப்வே அணிக்காக 2003-04 யு-19 உலகக் கோப்பைப் போட்டியிலும் விளையாடினார். நியூசிலாந்து அணிக்கான தனது முதல் சர்வதேச ஆட்டத்தை ஜிம்பாப்வேவுக்கு எதிராகவே விளையாடினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com