பிங்க் டெஸ்ட்: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மெக்ராத்துக்கு கரோனா
By DIN | Published On : 02nd January 2022 12:52 PM | Last Updated : 02nd January 2022 12:52 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத்துக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளென் மெக்ராத் மனைவி ஜேன் மெக்ராத் கடந்த 2008-இல் மார்பகப் புற்றுநோயால் உயிரிழந்தார். அவரது நினைவாக ஆண்டுதோறும் சிட்னி கிரிக்கெட் பிங்க் டெஸ்ட் விளையாடப்படும். இந்த டெஸ்ட் ஆட்டத்தின்மூலம், மெக்ராத் அறக்கட்டளைக்கு நிதி திரட்டப்படும். இந்த நிதியானது புற்றுநோயால் வாடுபவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களுக்கு உதவும் செவிலியர்களுக்கும் பயன்படுத்தப்படும். இந்த ஆட்டத்தின் மூன்றாம் நாள் ஆட்டம் ஜேன் மெக்ராத் தினம் என அழைக்கப்படும்.
இதையும் படிக்க | நியூசிலாந்து 328 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: வங்கதேசம் நிதானம்
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் 4-வது டெஸ்ட் ஆட்டம் சிட்னியில் புதன்கிழமை தொடங்குகிறது. இந்த ஆட்டம் பிங்க் டெஸ்ட் ஆட்டமாக நடைபெறுகிறது.
இந்த நிலையில், கிளென் மெக்ராத்துக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அவர் அதன்முன் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு மூன்றாம் நாள் ஆட்டமான ஜேன் மெக்ராத் தினத்தில் பங்கெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி ஹோலி மாஸ்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பிங்க் நிற தொப்பிகளை வழங்கும்போது கிளென் மெக்ராத் காணொலி வாயிலாக பங்கேற்கிறார்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G