ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை: பிரபல இங்கிலாந்து வீரர்
By DIN | Published On : 17th January 2022 03:31 PM | Last Updated : 17th January 2022 03:31 PM | அ+அ அ- |

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை என இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 4-0 எனத் தோல்வியடைந்துள்ளது இங்கிலாந்து அணி. ஹோபர்டில் நடைபெற்ற 5-வது டெஸ்டை 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
ஐபிஎல் ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் ஏலத்தில் பங்குபெறவில்லை என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
ஐபிஎல் ஏலத்துக்காக என்னுடைய பெயரைத் தரவில்லை. அணிக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு தியாகம் செய்யத் தயார். இந்த அணிக்காக நிறைய செய்யவேண்டியுள்ளது. அதற்காக என்னுடைய ஆற்றல் தேவைப்படுகிறது. என் நாட்டின் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக நான் மிகவும் அக்கறை கொள்கிறேன். அணி எந்த இடத்தில் இருக்கவேண்டும் என விரும்புகிறோமோ அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
ஐபிஎல்லைப் பொறுத்தவரை ஜோ ரூட் புதுமுகம் தான். 2018 ஐபிஎல் ஏலத்தில் ஜோ ரூட்டை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. அதன்பிறகு ஐபிஎல் ஏலத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை.