தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்று அசத்தியுள்ளது தென்னாப்பிரிக்க அணி. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே.எல். ராகுலும் துணை கேப்டனாக பும்ராவும் செயல்படுகிறார்கள்.
பார்ல் பகுதியில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி முதல்முறையாக டாஸில் தோற்றுள்ளது. இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் அறிமுகமாகியுள்ளார். 4-ம் நிலை வீரராக ஷ்ரேயஸ் ஐயர் விளையாடுவார் என கேப்டன் ராகுல் தெரிவித்தார். இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.
கடைசியாக 2017 ஜூனில் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினார் அஸ்வின். 35 வயது அஸ்வின் 2010 முதல் இதுவரை 111 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் சமீபகாலமாகச் சிறப்பாக விளையாடி வருகிறார் அஸ்வின். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் முழுமையாக ஓவர்கள் வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி - 5.25. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 2 ஆட்டங்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி - 5.25. இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல் ஒருநாள் ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணி
கே.எல். ராகுல் (கேப்டன்), ஷிகர் தவன், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், அஸ்வின், ஷர்துல் தாக்குர், புவனேஸ்வர் குமார், பும்ரா, சஹால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


