ஐபிஎல் 2022 ஏலத்துக்குப் பதிவு செய்த வீரர்கள்: பிசிசிஐ வெளியிட்ட முழு விவரம்

ஐபிஎல் 2022 ஏலத்துக்குப் பதிவு செய்த வீரர்கள்: பிசிசிஐ வெளியிட்ட முழு விவரம்

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காகப் பதிவு செய்துள்ள வீரர்களின் விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அணிகளின் விருப்பத்தைக் கேட்டுவிட்டு ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியல் உருவாக்கப்படும். அந்தப் பட்டியல், ஏலம் நடைபெறும் சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்படும்.

2018-க்குப் பிறகு நடைபெறும் மெகா ஏலம் என்பதால் இந்த வருட ஏலம் இரு நாள்களுக்கு நடைபெறவுள்ளது. ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. 

ஐபிஎல் ஏலத்துக்குப் பதிவு செய்த வீரர்கள் பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்வதற்காக வீரர்கள் பதிவு செய்வது ஜனவரி 20 உடன் முடிவடைந்தது. 896 இந்திய வீரர்கள், 318 வெளிநாட்டு வீரர்கள் என 1214 வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்ளப் பதிவு செய்துள்ளார்கள்.

மெகா ஏலம் இரு நாள்களுக்கு நடக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய 270 வீரர்கள், சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகாத 903 வீரர்கள், 41 அசோசியேட் வீரர்கள் பதிவு செய்துள்ளார்கள். இதன் விவரங்கள்:

- 61 இந்திய வீரர்கள்
- 209 வெளிநாட்டு வீரர்கள்
- 41 அசோசியேட் வீரர்கள்
-143 ஐபிஎல் போட்டியில் முன்பு விளையாடி, இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய வீரர்கள்
- 9 ஐபிஎல் போட்டியில் முன்பு விளையாடி இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வெளிநாட்டு வீரர்கள்
- 692 உள்ளூர் இந்திய வீரர்கள்
- 62 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வெளிநாட்டு வீரர்கள் 

குறிப்பு - ஒவ்வொரு அணியும் 25 வீரர்களைத் தேர்வு செய்வதாக இருந்தால் ஏலத்தில் 217 வீரர்கள் பங்கேற்கவேண்டும். அதில் 70 பேர் வெளிநாட்டு வீரர்கள்

318 வெளிநாட்டு வீரர்கள் விவரங்கள்

ஆப்கானிஸ்தான் - 20 வீரர்கள்
ஆஸ்திரேலியா - 59 வீரர்கள்
வங்கதேசம் - 9 வீரர்கள்
இங்கிலாந்து - 30 வீரர்கள்
அயர்லாந்து - 3 வீரர்கள்
நியூசிலாந்து - 29 வீரர்கள்
தென்னாப்பிரிக்கா - 48 வீரர்கள்
இலங்கை - 36 வீரர்கள்
மே.இ. தீவுகள் - 41 வீரர்கள்
ஜிம்பாப்வே - 2 வீரர்கள்
பூடான் - 1 வீரர்
நமீபியா - 5 வீரர்கள்
நேபாளம் - 15 வீரர்கள்
நெதர்லாந்து - 1 வீரர்
ஓமன் - 3 வீரர்கள்
ஸ்காட்லாந்து - 1 வீரர்
ஐக்கிய அரபு அமீரகம் - 1 வீரர்
அமெரிக்கா - 14 வீரர்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com