63-வது முயற்சியில் முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் காலிறுதிக்குத் தகுதி பெற்ற வீராங்கனை

2005-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியில் முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டிக்கு அறிமுகமானார்...
63-வது முயற்சியில் முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் காலிறுதிக்குத் தகுதி பெற்ற வீராங்கனை

முயற்சி செய்வதற்கு எதுவும் தடையில்லை.

இந்த வாக்கியத்தை நிரூபித்துள்ளார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலிஸ் கார்னட். 

இதுவரை 62 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் போட்டியிட்டும் ஒருமுறை கூட காலிறுதிக்கு அவர் தகுதி பெற்றதில்லை. இருந்தும் தனது 63-வது முயற்சியில் பெருங்கனவை எட்டியுள்ளார் 32 வயது அலிஸ் கார்னட். ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். 

இன்று நடைபெற்ற 4-வது சுற்றில் இருமுறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சைமோனா ஹேலப்பை 6-4, 3-6, 6-4 என வீழ்த்தி முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றின் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார் அலிஸ் கார்னட். காலிறுதிச் சுற்றில் தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள டேனியல் காலின்ஸை எதிர்கொள்கிறார். 2-வது சுற்றில் நெ.3 வீராங்கனையான முகுருஸாவைத் தோற்கடித்தி அதிர்ச்சி ஏற்படுத்தினார் அலிஸ் கார்னட். அடுத்ததாக ஹேலப்பை வீழ்த்தி மேலும் முன்னேறியுள்ளார். 

2005-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியில் முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டிக்கு அறிமுகமானார் அலிஸ் கார்னட். 63-வது தடவையாக மீண்டும் முயற்சி செய்தது தாமதமானதல்ல என்று பேட்டியளித்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அரங்கிலேயே அழுதார்.  இதற்கு முன்பு தாய்லாந்தின் டமரைன் தனது 45-வது முயற்சியில் கிராண்ட் ஸ்லாம் காலிறுதிக்குத் தகுதி பெற்றார். அந்தச் சாதனையை அலிஸ் கார்னட் முறியடித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com