புஷ்பா ஸ்ரீவள்ளி பாடல்: பாட்டியுடன் நடனமாடிய ஹார்திக் பாண்டியா (விடியோ)
By DIN | Published On : 26th January 2022 03:39 PM | Last Updated : 26th January 2022 03:39 PM | அ+அ அ- |

புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஸ்ரீவள்ளி பாடலுக்குத் தன் பாட்டியுடன் இணைந்து நடனமாடிய காணொளியை ஹார்திக் பாண்டியா வெளியிட்டுள்ளார்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தன்னா, ஃபஹத் ஃபாசில், அனசுயா பரத்வாஜ் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் - புஷ்பா. இசை - தேவி ஸ்ரீ பிரசாத். ஊ சொல்றியா பாடலால் இந்திய அளவில் கவனம் பெற்ற இந்தப் படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் ஹிந்தியில் அமோக வசூலை அடைந்து பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இதனால் அல்லு அர்ஜுனின் புகழ் மேலும் கூடியுள்ளது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது.
புஷ்பா படத்தின் பாடல்கள் மிகவும் புகழடைந்ததால் பல பிரபலங்கள் இதன் பாடல்களுக்கு நடனமாடி அதன் காணொளிகளைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள். இந்நிலையில் பிரபல கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, தனது பாட்டியுடன் இணைந்து புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாடலுக்கு நடனமாடி அதன் காணொளியை வெளியிட்டுள்ளார். அழகாக நடனமாடிய பாட்டிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...