தந்தையானார் யுவ்ராஜ் சிங்
By DIN | Published On : 26th January 2022 01:20 PM | Last Updated : 26th January 2022 01:20 PM | அ+அ அ- |

பிரபல முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங், ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.
40 வயது யுவ்ராஜ் சிங், இந்திய அணிக்காக 2000 முதல் 2017 வரை விளையாடி 40 டெஸ்டுகள், 304 ஒருநாள், 58 டி20 ஆட்டங்களில் விளையாடினார். 2019-ல் ஓய்வு பெற்றார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நடிகையான ஹஸல் கீச்சை 2016-ல் திருமணம் செய்தார் யுவ்ராஜ் சிங். இந்நிலையில் ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ள தகவலை இன்ஸ்டகிராமில் அவர் தெரிவித்துள்ளார். இன்று எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
யுவ்ராஜ் சிங் தந்தையானதற்குப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...