மே.இ. தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் தமிழக வீரர் ஷாருக் கானுக்கு வாய்ப்பு?

ரிஷி தவான் இந்திய அணியில் மீண்டும் விளையாடுவார் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஷாருக் கான்
ஷாருக் கான்

மே.இ. தீவுகளுக்கு எதிரான தொடரில் தமிழக அதிரடி வீரர் ஷாருக் கான் தேர்வாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் ஆமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறுகின்றன. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன. 

இந்தத் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் புதிய வீரர்களைத் தேர்வு செய்ய தேர்வுக்குழு எண்ணியுள்ளது.

ஒருநாள் தொடருக்கு 31 வயது ரிஷி தவானும் டி20 தொடருக்கு 26 வயது ஷாருக் கானும் தேர்வாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2016-ல் இந்திய அணிக்குத் தேர்வான ரிஷி தவான், 3 ஒருநாள், 1 டி20 ஆட்டத்தில் விளையாடினார். 6 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் விளையாடுவார் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஹிமாசலப் பிரதேச அணிக்குத் தலைமை தாங்கி விஜய் ஹசாரே போட்டியை வென்று தந்த ரிஷி தவான், அப்போட்டியில் 458 ரன்களும் வேகப்பந்துவீச்சில் 17 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார். சையத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே போட்டிகளில் தமிழக வீரர் ஷாருக் கான் கடைசிக்கட்டங்களில் அதிரடியாக விளையாடியதால் அவரும் தேர்வாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com