2022-ல் ஷிகர் தவன் இந்திய அணியின் எத்தனையாவது கேப்டன்?

ஷிகர் தவன் கேப்டனாகவும் ஜடேஜா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 
ஷிகர் தவன்
ஷிகர் தவன்


மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவன் கேப்டனாகவும் ஜடேஜா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து இந்திய அணியில் கேப்டன்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகியிருக்கிறது. ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தொடரிலும் அவர் புதிய கேப்டனுடன் பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த வருடம் இந்திய அணியின் 8-வது கேப்டனாக உள்ளார் ஷிகர் தவன். 

கேப்டன்களின் எண்ணிக்கை அதிகமாகக் காரணம்?

கோலிக்கு அடுத்ததாக இந்திய டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். எனினும் ஓய்வு, காயம், கரோனா எனப் பல்வேறு காரணங்களால் ரோஹித் சர்மாவால் சில தொடர்களில் இடம்பெற முடியவில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் புதிய கேப்டன்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது. 

2022-ல் இந்திய அணியின் கேப்டன்கள்

விராட் கோலி - தெ.ஆ. டெஸ்ட்
கே.எல். ராகுல் - தெ.ஆ. ஒருநாள் தொடர்
ரோஹித் சர்மா - இலங்கை, மே.இ. தீவுகள் தொடர்கள்
ரிஷப் பந்த் - தெ.ஆ. டி20 தொடர்
பாண்டியா - அயர்லாந்து டி20 தொடர்
பும்ரா - இங்கிலாந்து டெஸ்ட்
தினேஷ் கார்த்திக் - இரு டி20 பயிற்சி ஆட்டங்கள்
ஷிகர் தவன் - மே.இ. ஒருநாள் தொடர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com