காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: இந்திய மகளிர் டி20 அணி அறிவிப்பு

ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையிலான இந்திய அணியில்...
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: இந்திய மகளிர் டி20 அணி அறிவிப்பு

பிர்மிங்கம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் ஆளப்பட்டு சுதந்திரம் பெற்ற நாடுகள் காமன்வெல்த் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. 53 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு காமன்வெல்த் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவற்றுக்கு காமன்வெல்த் முக்கியத்துவம் அளித்துவருகிறது. 53 நாடுகளே உறுப்பினர்களாக இருந்தாலும், 71 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கின்றனர். காமன்வெல்த் நாடுகளிடையே நெருக்கம், தோழமை ஏற்படும் வகையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என்று அழைக்கப்படும் இப்போட்டிகளில் முதல் போட்டிகள் கடந்த 1930-ம் ஆண்டு தொடங்கியது.

24 வருடங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 50 ஓவர் ஆடவர் கிரிக்கெட் இடம்பெற்றது. தென் ஆப்பிரிக்கா தங்கமும் ஆஸ்திரேலியா வெள்ளியும் பெற்றன. 2022 பிர்மிங்கம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா உள்பட எட்டு அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பார்படோஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 

இங்கிலாந்தின் பிர்மிங்கம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையிலான இந்திய அணியில் ஸ்நேக் ராணா மீண்டும் இடம்பிடித்துள்ளார். யாஷ்திகா, தானியா என இரு விக்கெட் கீப்பர்கள் தேர்வாகியுள்ளார்கள். 

ஜூலை 29 அன்று ஆஸ்திரேலியா, ஜூலை 31 அன்று பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் இந்திய மகளிர் அணி மோதுகிறது. 

இந்திய மகளிர் டி20 அணி

ஹர்மன்ப்ரீத் கெளர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, எஸ். மேக்னா, தானியா, யாஷ்திகா, தீப்தி சர்மா, ராஜேஸ்வரி, பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா, ஜெமிமா ரோட்ரிகஸ், ராதா யாதவ், ஹர்லீன் தியோல், ஸ்நேக் ராணா. 

மாற்று வீராங்கனைகள்: ரிச்சா கோஷ், பூணம் யாதவ், சிம்ரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com