தென் ஆப்பிரிக்க தொடர்: விராட் கோலிக்கு ஓய்வு?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடரிலிருந்து விராட் கோலி ஓய்வளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க தொடர்: விராட் கோலிக்கு ஓய்வு?


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடரிலிருந்து விராட் கோலி ஓய்வளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

"தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படலாம். அவர் நிறைய கிரிக்கெட் விளையாடி வருகிறார். பாதுகாப்பு வளையத்தில் நிறைய நேரம் இருந்துள்ளார். கோலி மற்றும் மற்ற மூத்த வீரர்களுக்கு அவ்வப்போது ஓய்வு வழங்கப்படுவது கொள்கை முடிவு."

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஜூன் 9 தொடங்கி ஜூன் 19-இல் நிறைவடைகிறது.

தென் ஆப்பிரிக்க தொடருக்குப் பிறகு இந்திய அணி ஜூன், ஜூலையில் பிரிட்டன் பயணிக்கிறது. முதலில் அயர்லாந்துக்கு எதிராக டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்பிறகு, இங்கிலாந்துக்கு எதிராக 2021 டெஸ்ட் தொடரில் மீதமுள்ள ஒரு ஆட்டத்தில் விளையாடுகிறது இந்திய அணி. இதைத் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.

நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி மோசமாக விளையாடி வருகிறார். மூன்று முறை முதல் பந்தில் ஆட்டமிழந்துள்ளார். ஒருமுறை மட்டுமே 50 ரன்களைத் தாண்டியுள்ள கோலி, 12 ஆட்டங்களில் 216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே, தென் ஆப்பிரிக்க தொடரில் அவருக்கு அளிக்கப்படவுள்ள ஓய்வு, பிரிட்டன் பயணத்துக்கு புத்துணர்ச்சியுடன் திரும்புவதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலிக்குத் தற்போதைய தேவை ஓய்வு என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com