2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள்: கோலி சாதனை

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற சாதனையை விராட் கோலி நிகழ்த்தியுள்ளார்.

News image
Updated On :2 நவம்பர் 2022, 8:50 am

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற சாதனையை விராட் கோலி நிகழ்த்தியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அடிலெய்டில் இந்தியா - வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் தீபக் ஹூடாவுக்குப் பதிலாக அக்‌ஷர் படேல் இடம்பெற்றுள்ளார். இதனால் தினேஷ் கார்த்திக் இந்த ஆட்டத்தில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் 16 ரன்கள் எடுத்தபோது புதிய சாதனை நிகழ்த்தினார் விராட் கோலி. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையை கோலி பெற்றுள்ளார். இதற்கு முன்பு இலங்கையின் ஜெயவர்தனே 1016 ரன்கள் எடுத்த நிலையில் தற்போது அதைத் தாண்டியுள்ளார் கோலி.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள்

விராட் கோலி - 1017* (25 ஆட்டங்கள்)
மஹேலா ஜெயவர்தனே - 1016 (31 ஆட்டங்கள்)
கெய்ல் - 965 (33 ஆட்டங்கள்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.