மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

விராட் கோலிக்கு ஐசிசி விருது

சிறந்த வீரருக்கான ஐசிசி விருது விராட் கோலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :7 நவம்பர் 2022, 10:06 am

அக்டோபர் மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது விராட் கோலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் 3 அரை சதங்களுடன் 246 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரருக்கான விருதை ஐசிசி வழங்கி வருகிறது. இந்த விருதுக்கு முதல்முறையாகப் பரிந்துரைக்கப்பட்ட கோலி, அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரராகத் தேர்வாகியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர், ஜிம்பாப்வேயின் சிகந்தர் ராஸா ஆகிய இருவரையும் வீழ்த்தி இந்த விருதை அவர் வென்றுள்ளார். மகளிர் பிரிவில் பாகிஸ்தானின் நிடா டர் சிறந்த வீராங்கனையாகத் தேர்வாகியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.