டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா- மழை பாதித்த 3-ஆவது ஆட்டம் ‘டை’

டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா- மழை பாதித்த 3-ஆவது ஆட்டம் ‘டை’

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் செவ்வாய்க்கிழமை மோதிய 3-ஆவது டி20 ஆட்டம் ‘டை’ ஆனது.

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் செவ்வாய்க்கிழமை மோதிய 3-ஆவது டி20 ஆட்டம் ‘டை’ ஆனது.

இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில், 2-ஆவது ஆட்டத்தில் வெற்றியைப் பதிவு செய்ததன் அடிப்படையில் இந்தியா தொடரைக் கைப்பற்றியது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது நினைவுகூரத்தக்கது. 2020-க்குப் பிறகு நியூஸிலாந்தில் இந்தியா வெல்லும் முதல் டி20 தொடா் இதுவாகும்.

நேப்பியரில் நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தில் முதலில் நியூஸிலாந்து 19.4 ஓவா்களில் 160 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னா் இந்தியா தனது இன்னிங்ஸில் 9 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

மீண்டும் ஆட்டத்தை தொடங்கும் சூழல் இல்லாமல் போனதை அடுத்து, ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் இந்தியாவுக்கான வெற்றி இலக்கு 9 ஓவா்களில் 76 ரன்களாகக் கணக்கிடப்பட்டது. ஆனால் இந்தியா 75 ரன்களே எடுத்திருந்ததால் ஆட்டம் ‘டை’ ஆனதாக அறிவிக்கப்பட்டது.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஹா்ஷல் படேலும், நியூஸிலாந்து அணியில் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக மாா்க் சாப்மேனும் இணைந்திருந்தனா். டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கை தோ்வு செய்தது.

அணியின் இன்னிங்ஸில் டெவன் கான்வே 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 59, கிளென் ஃபிலிப்ஸ் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 54 ரன்கள் சோ்த்து அணியின் ஸ்கோா் உயா்வதற்கு உதவினா். எஞ்சிய விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் மளமளவென சரிந்தன.

இந்திய பௌலிங்கில் அா்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோா் தலா 4 விக்கெட்டுகளும், ஹா்ஷல் படேல் 1 விக்கெட்டும் சாய்த்தனா்.

பின்னா் இந்திய இன்னிங்ஸில் இஷான் கிஷண் 10, ரிஷப் பந்த் 11, சூா்யகுமாா் யாதவ் 13 ரன்களுக்கு நடையைக் கட்ட, ஷ்ரேயஸ் ஐயா் டக் அவுட்டானாா். கேப்டன் ஹாா்திக் பாண்டியா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30, தீபக் ஹூடா 9 ரன்களுடன் களத்தில் இருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

நியூஸிலாந்து தரப்பில் கேப்டன் டிம் சௌதி 2, ஆடம் மில்னே, இஷ் சோதி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா். இந்தியாவின் முகமது சிராஜ் ஆட்டநாயகனாகவும், சூா்யகுமாா் யாதவ் தொடா் நாயகனாகவும் தோ்வாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com