ரஸ்ஸல்
ரஸ்ஸல்

2021 டி20 உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்ட வீரர்கள் யார் யார்?

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மட்டும் கடந்தமுறை விளையாடிய வீரர்களில் 12 பேர் இம்முறை விளையாடவில்லை.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 

மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

2021 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய வீரர்களில் பலர் இந்த உலகக் கோப்பைக்குத் தேர்வாகவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மட்டும் கடந்தமுறை விளையாடிய வீரர்களில் 12 பேர் இம்முறை விளையாடவில்லை. ஓய்வு அறிவிப்பு, சரியாக விளையாடாததால் நீக்கம், காயம் என இதற்குப் பல காரணங்கள் உண்டு. இதில் உள்ள வீரர்களில் சிலர் பிரதான அணியில் இல்லாமல் மாற்று வீரர்களாக இடம்பெற்றுள்ளார்கள். 

10 முக்கிய அணிகளில் இடம்பெறாத வீரர்களின் பட்டியல் இதுதான்: 

நீக்கப்பட்ட வீரர்கள்

இந்தியா: ராகுல் சஹார், இஷான் கிஷன், ஜடேஜா, ஷமி, ஷர்துல் தாக்குர், வருண் சக்ரவர்த்தி, பும்ரா
பாகிஸ்தான்: ஃபகார் ஸமான், ஹசன் அலி, இமாத் வாசிம், முஹமது ஹபீஸ், சர்பராஸ் அஹமது, சோயிப் மாலிக்
ஆஸ்திரேலியா: டான் கிறிஸ்டியன், நாதன் எல்லீஸ், டேனியல் சாம்ஸ், மிட்செல் ஸ்வெப்சன்
இங்கிலாந்து: இயன் மார்கன், ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், டாம் கரண், ஜேசன் ராய், ஜேம்ஸ் வின்ஸ், டைமல் மில்ஸ்
நியூசிலாந்து: டாட் ஆஸ்லே, கைல் ஜேமிசன், டிம் சைஃபர்ட்
தென்னாப்பிரிக்கா: பியோன் ஃபோர்டைன், வியான் முல்டர், வான் டர் டுசன், பிரிடோரியஸ்
இலங்கை: தினேஷ் சண்டிமல், அகிலா தனஞ்ஜெயா, பினுரா, அவிஷ்கா, குசால் பெரேரா
மேற்கிந்தியத் தீவுகள்: கிரோன் பொலார்ட், டுவைன் பிராவோ, ராஸ்டன் சேஸ், ஆண்ட்ரே பிளெட்சர், கிறிஸ் கெயில், ரவி ராம்பால், ரஸ்ஸல், லெண்டில் சிம்மன்ஸ், ஒஷானே தாமஸ், ஹேடன் வால்ஷ், ஃபேபியன் ஆலன், ஹெட்மையர்
வங்கதேசம்: மஹ்மதுல்லா, முஷ்ஃபிகுர் ரஹிம், மெஹிதி ஹசன், முஹமது நயிம், ஷமிம் ஹுசைன், ஷொரிஃபுல் இஸ்லாம், செளம்யா சர்கார்
ஆப்கானிஸ்தான்: குல்பதின் நைப், ஹமீது ஹாசன், ஹஸ்மதுல்லா சாஹிதி, கரிம் ஜனத், முஹமது     ஷஸாத், ஷராஃபுதீன் அஷ்ரஃப்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com