/

மும்பை வீரருக்கும் கேகேஆர் கேப்டனுக்கும் சண்டை: நடந்தது என்ன? 

கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணா, மும்பை வீரர் ஹிருத்திக் ஷோகின் ஆடுகளத்தில் சண்டையிட்ட விடியோ வைரலானது. 

News image
Updated On :17 ஏப்ரல் 2023, 12:29 pm

DIN

நேற்றைய (மார்ச்.16) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேகேஆர் அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 20 ஓவர்களுக்கு 185 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை 17.4 ஓவர்களில் 186 ரன்களை எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் 9வது ஓவரில் மும்பை ப்ந்து வீச்சாளர் ஹிருத்திக் ஷோகின் கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணாவை ஆட்டமிழக்க செய்வார். இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கேகேஆர் வீரரைப் பார்த்து ஏதோ சைகை செய்வார். இதனால் ஆத்திரமான நிதிஷ் ராணா ஏதோ ஆக்ரோஷமாக பேசி அவரை நோக்கி செல்வார். மும்பை அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் நிதிஷ் ராணாவை தடுத்து சென்று விடுவார். 

இந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹிருத்திக் ஷோகின் செய்தது தவறென பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.