மீண்டும் கேப்டனாக கோலி: பஞ்சாபை வீழ்த்திய பெங்களூரு
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலானப் போட்டி மொகாலியில் இன்று (ஏப்ரல் 20) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது. அந்த அணியில் டூ பிளசிஸ் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலி 59 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது பஞ்சாப் கிங்ஸ். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான அதர்வா டைடு 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மாட் ஷாட் 8 ரன்களிலும், லியம் லிவிங்ஸ்டன் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரபசிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின் களமிறங்கியவர்களில் ஜிதேஷ் சர்மாவைத் தவிர யாரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அதிரடியாக விளையாடிய ஜிதேஷ் சர்மா 27 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் 150 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு அணியில் சார்பில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் வெறும் 21 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளும், வெய்ன் பர்னல் மற்றும் ஹர்சல் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இன்றையப் போட்டியில் விராட் கோலி கேப்னாக அணியை வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...