தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

லக்னௌக்கு 136 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத் டைட்டன்ஸ்

லக்னௌ சூப்பர் ஜெயண்ட் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் குவித்துள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2023, 12:25 pm

DIN

லக்னௌ சூப்பர் ஜெயண்ட் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டி உத்தர பிரதேசத்தில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். குஜராத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. சுப்மன் கில் 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கியவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணியிம் கேப்டன் ஹார்திக் பாண்டியா மற்றும் விருத்திமான் சாஹா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ரன் ஓரளவுக்கு உயர்ந்தது. நிதானமாக விளையாடிய சாஹா 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். கடைசி கட்டத்தில் கேப்டன் ஹார்திக் பாண்டியா சிறிது அதிரடி காட்ட அந்த அணியின் ரன்கள் சற்று உயர்ந்தது. அவர் 50 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் குவித்தது. லக்னௌ தரப்பில் க்ருணால் பாண்டியா மற்றும் ஸ்டொய்னிஸ் தலா 2 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் மற்றும் அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.