சிறந்த கேட்ச் பிடித்தும் விருது தரவில்லை: வைரலாகும் தோனியின் பதில்

நேற்றைய போட்டியில் தோனி சிறந்த கேட்ச் பிடித்தும் விருது தரவில்லை என கிண்டலாக பேசியுள்ளது இணையத்தில் வைரலாகிறது. 
சிறந்த கேட்ச் பிடித்தும் விருது தரவில்லை: வைரலாகும் தோனியின் பதில்

நேற்றைய ஹைதராபாத்துடனான போட்டியில் சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சிஎஸ்கே கேப்டனும் விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி ஐபிஎல் போட்டிகளில் ஸ்டம்பிங், கேட்ச் என 200 முறை விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். நேற்று நடந்தப் போட்டியில் தோனி கேட்ச், ஸ்டம்பிட், ரன் அவுட் என அனைத்திலும் அசத்தினார். இதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

ஹைதராபாத் கேப்டன் மார்கரம் சிஎஸ்கே ஸ்பின்னர் தீக்‌ஷனா பந்து வீச்சில் அவுட் ஆனார். இந்த விக்கெட் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றது. காரணம் தோனி பிடித்த கேட்ச் இந்த விக்கெட்தான். மார்கரம் பேட்டில் பந்து உறசி திடீரென மேலெழும். சாதாராணமாக இந்த கேட்சுகளை பிடிப்பது கடினம்.

சிறந்த கேட்ச் குறித்து தோனியிடம் கேட்டபோது, “நான் சிறந்தை கேட்சை பிடித்தேன். சில நேரங்களில் கீப்பர்கள் பிடிக்கும் கேட்ச் எளிதானதென நினைக்கிறார்கள். அது உண்மையில் சிறந்த கேட்ச். ஆனால் எனக்கு விருது கிடைக்கவில்லை. அந்த கேட்ச் பிடிக்க காரணம் நான் தவறான நிலையில் நின்று இருந்தேன். அதனால் என்னால் எளிமையாக பிடிக்க முடிந்தது. ராகுல் திராவிட்டும் இதுமாதிரி ஒரு கேட்ச் பிடித்திருக்கிறார்” என சிரித்துக் கொண்டே கூறினார். தோனியின் எளிமையை கிரிக்கெட் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com