தோனி ரிவ்யூ சிஸ்டம்: டிஆர்எஸ்ஸில் சிஎஸ்கேவின் வெற்றி விகிதம் எவ்வளவு?

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டிஆர்எஸ் வெற்றி விகிதம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தோனி ரிவ்யூ சிஸ்டம்: டிஆர்எஸ்ஸில் சிஎஸ்கேவின் வெற்றி விகிதம் எவ்வளவு?

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டிஆர்எஸ் வெற்றி விகிதம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் நடுவரின் முடிவை அணியின் கேப்டன்கள் மேல் முறையீடு செய்யும் டிஆர்எஸ் விதிமுறை உள்ளது. ஒரு போட்டியில் டிஆர்எஸ் முறையை பயன்படுத்தும் அணி இரண்டு முறைக்கு மேல் அதில் தோல்வியுற்றால் அந்த போட்டியில் மீண்டும் பயன்படுத்த முடியாது.

டிஆர்எஸ் விதிமுறை அறிமுகப்படுத்தியதில் இருந்தே மகேந்திர சிங் தோனி கேட்கும் அனைத்து டிஆர்எஸ்ஸும் அணிக்கு சாதகமாகவே முடியும். இதனால் ரசிகர்கள் தோனி ரிவ்யூ சிஸ்டம் என்று கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 33-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 

இந்த போட்டியில் கடைசி ஓவரில் தோனி பேட்டிங் பிடிக்க வந்தபோது முதல் பந்து தோனியின் இடுப்புக்கு மேல் சென்றது. இதற்கு களத்தில் இருந்த நடுவர்கள் நோ-பால் தராததால், நடுவரின் முடிவை தோனி மேல்முறையீடு செய்தார். முடிவில் அது நோ-பால் என்று மூன்றாவது நடுவர் அறிவித்தார்.

அதேபோல், கொல்கத்தா அணி பேட்டிங் செய்தபோது துஷார் தேஷ்பாண்டே வீசிய 17வது ஓவர் 3-வது பந்தை எதிர்கொண்ட டேவிட் வீஸ் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால், பேட்டில் படவில்லை எனக் கூறிய கள நடுவர் அவுட் தரவில்லை. இதற்கும் டிஆர்எஸ் அப்பிள் செய்த தோனி வெற்றி கண்டார்.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அப்பிள் செய்த டிஆர்எஸ்களில் 85.71 சதவிகிதம் வெற்றி கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தோனி ரிவ்யூ சிஸ்டம் என்று டிவிட்டரில் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com