தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காலிறுதியில் சிந்து, பிரணாய்

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 6:26 pm

DIN

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

மகளிா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் சிந்து 21-12, 21-15 என்ற கேம்களில் சீனாவின் ஹான் யுவை வெளியேற்றி காலிறுதிக்கு தகுதிபெற்றாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலுள்ள ஹெச்.எஸ். பிரணாய் 21-16, 5-21, 21-18 என்ற கேம்களில் இந்தோனேசியாவின் சிகோ ஔரா டுவியை வீழ்த்தினாா். எனினும், கே.ஸ்ரீகாந்த் வெற்றியை இழந்து போட்டியிலிருந்து வெளியேறினாா்.

ஆடவா் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணை 21-13, 21-11 என்ற கேம்களில் தென் கொரியாவின் ஜின் யோங்/நா சங் சியுங் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு வந்துள்ளது.

மகளிா் இரட்டையா் பிரிவில் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி போட்டியிலிருந்து விலகியது.

கலப்பு இரட்டையா் பிரிவில் ரோஹன் கபூா்/சிக்கி ரெட்டி இணையை எதிா்கொள்ள இருந்த தென் கொரியாவின் சியோ சியுங் ஜே/சே யு ஜங் கூட்டணி போட்டியிலிருந்து விலகியதால், ரோஹன்/சிக்கி இணை காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. எனினும், சுமீத் ரெட்டி/அஸ்வினி பொன்னப்பா இணை தோல்வியைத் தழுவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.