தேர்வுக் குழுவில் பங்கேற்கும் ரோஹித்? ஆசிய கோப்பைக்கான உத்தேச அணி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நாளை நடைபெறவுள்ள தேர்வுக் குழுவில் பங்கேற்க உள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

2023, 2024 என இரு ஆண்டுகளுக்கான ஆசியக் கோப்பை குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது ஆசிய கிரிக்கெட் கவுன்சில். இந்த வருடம் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. இதனால் 2023 ஆசியக் கோப்பைப் போட்டியும் செப்டம்பரில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறவுள்ளது. ஆறு அணிகள் கலந்துகொள்ளும் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

2018, 2022 ஆசியக் கோப்பைப் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தியது. 2023 ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டி பாகிஸ்தானில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. எனினும் இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளதால் இலங்கையில் நடைபெற உள்ளது. 

ஆசியக் கோப்பை ஆக.30ஆம் நாள் தொடங்கி செப்.17ஆம் நாள் முடிவடைய உள்ளது. 

இந்நிலையில் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளது. தில்லியில் நடைபெற உள்ள இந்திய அணி தேர்வுக் குழுவில் நாளை ரோஹித் சர்மா, ராகுல் திராவிட் பங்கேற்க உள்ளார்கள். 

குரூப் ஏ பிரிவில் : இந்தியா, பாகிஸ்தான், நேபாளம். 
குரூப் பி பிரிவில்: இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான். 

உத்தேச அணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

17 பேர் கொண்ட உத்தேச அணி: ரோகித் சர்மா, விராட் கோலி,ஷுப்மன் கில்,சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, பும்ரா, ஷமி, சிராஜ், இஷான், குல்தீப், அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்குர், திலக் வர்மா, சஹால்/அஸ்வின். 

கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர்- உடல்நிலை பொறுத்து மாறுபடும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com