அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

காயத்திலிருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியது குறித்து மனம் திறந்த ஸ்ரேயாஸ் ஐயர்!

காயத்திலிருந்து குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்குத் திரும்பியுள்ளது குறித்து மனம் திறந்துள்ளார்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2023, 3:49 pm

DIN

காயத்திலிருந்து குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்குத் திரும்பியுள்ளது குறித்து மனம் திறந்துள்ளார்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இந்த ஆண்டு முழுவதும் பெரிய அளவில் எந்த ஒரு போட்டியிலும் இடம் பெறவில்லை. இன்னும் சில நாட்களில் இந்திய அணி ஆசியக் கோப்பையில் விளையாடவுள்ளது. அதன் பின்னர், அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலகக் கோப்பையில் சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் கனவோடு இந்திய அணி களமிறங்குகிறது. உலகக் கோப்பை தொடர் தொடங்க சில வாரங்களே உள்ள நிலையில், இந்திய அணியில் 4-வது இடத்தில் யார் களமிறங்கப் போகிறார்கள் என்ற கேள்வி பெரும் விவாதமானது. பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்து இந்திய அணிக்கு  அணிக்குத் திரும்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

காயத்திலிருந்து குணமடைந்து அணிக்குத் திரும்பியுள்ள அவர் பிசிசிஐ-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சரியாக சொல்ல வேண்டுமென்றால் எனக்கு கால் சிறுவிரல் நரம்பில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தினால் ஏற்பட்ட வலி தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகமானதாக இருந்தது. எனக்கு என்ன செய்கிறது என்பதைக் கூட என்னால் சரியாக கூற முடியவில்லை. அந்த அளவுக்கு வலி அதிகமாக இருந்தது. இந்த பிரச்னை எனக்கு நீண்ட நாள்களாக இருந்தது. நான் அதற்காக ஊசி போட்டுக் கொள்வேன். ஆனால், மருத்துவர்கள் என்னை அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தினார்கள். பின்னர், அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்தேன். தற்போது முழுமையாக குணமடைந்து அணிக்குத் திரும்புவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.