சர்வதேச டி20-ல் சூர்யகுமார் புதிய சாதனை

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சாதனையை சக வீரர் சூர்யகுமார் யாதவ் நேற்று சமன் செய்தார்.
சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 போட்டியில் புதிய சாதனையை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் 36 பந்துகளில் 56 ரன்கள் குவித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அவுட்டானார்.

இந்தப் போட்டியில் குறைந்த பந்துகளில் 2,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ்(1,163 பந்துகள்) படைத்துள்ளார். இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபின்ச்(1,283 பந்துகள்) உள்ளார்.

மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில் 2,000 ரன்களை கடந்த இந்தியர் என்ற விராட் கோலியின் சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்தார்.

சர்வதேச அளவில் பாகிஸ்தானின் பாபர் அசாம்(52 இன்னிங்ஸ்), முகமது ரிஸ்வான்(52 இன்னிங்ஸ்) ஆகிய இருவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலியும், சூர்யகுமார் யாதவும் உள்ளனர். நான்காவது இடத்தில் இந்திய வீரர் கே.எல்.ராகுல்(58 இன்னிங்ஸ்) உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com