பொ்த் டெஸ்ட்: 300 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 300 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. 
பொ்த் டெஸ்ட்: 300 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா!

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. 

பொ்த் நகரில் வியாழக்கிழமை தொடங்கிய முதல் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 487 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

லயன் 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ், ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளும், ஹ்ச்செசில்வுட், ஹெட், மிட்செல் மார்ஷ் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 

3வது நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 84/2 ரன்கள் எடுத்த நிலையில் 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பெரிதும் எதிர்பார்த்த வார்னர் டக்கவுட்டானார். லபுஷேனும் 2 ரன்களில் வெளியேறினார். 

அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் கவாஜாவுடன் நிலைத்து நின்று ஆடினார். ஷாஹீன் ஷா அஃப்ரிடி பந்தில் அடி உதை வாங்கினாலும் மனம் தளராமல் பந்தினை சிக்ஸருக்கு விளாசினார் ஸ்மித். 

3ஆம் நாள் முடிவில் ஸ்மித் 43 (72 பந்துகளில்) ரன்கள், கவாஜா 34 (106 பந்துகளில்) எடுத்திருந்தனர். குர்ரம் ஷாஜாத் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com