தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தோனியை யாருடனும் ஒப்பிட முடியாது: கே.எல்.ராகுல் புகழாரம்! 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்தியாவின் கேப்டன் கே.எல்.ராகுல் முன்னாள் கேப்டன் தோனி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

News image
Updated On :16 டிசம்பர் 2023, 10:00 am

DIN

முன்னாள் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2020ஆம் ஆண்டு ஆக.15ஆம் தேதியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஐசிசியின் முக்கியமான 3 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு பெற்று தந்துள்ளார். அவரது சாதனைகளை இதுவரை எந்த இந்திய கேப்டனும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

2023ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி எம்.எஸ்.தோனியின் தலைமையில் வென்றது. தற்போது, ஐபிஎல் மினி ஏலம் டிச.19இல் தொடங்க உள்ளது. சிஎஸ்கே அணியில் இருந்து 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். 

மும்பை கேப்டனாக ஹார்திக் நியமிக்கப்பட்டதில் இருந்து சமூக வலைதளம் முழுக்க ரோஹித் சர்மா ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தினை பதிவு செய்து வருகிறார்கள். 

சமூக ஊடங்கங்களில் ஆக்டிவாக இல்லாத தோனி எப்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருப்பார். 

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியாவின் கேப்டன் கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் கேப்டன் தோனி குறித்து நேர்காணலில் கே.எல்.ராகுல் கூறியதாவது: 

எங்களில் யாரையும் தோனியுடன் ஒப்பிட முடியாது. யாரும் அந்த உயர்ந்த மனிதனுடன் ஒப்பிட விரும்பமாட்டோம். அவர்தான் எப்போதும் எங்களுக்கு தலைவன். அவரிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம். டிஆர்எஸ், ஸ்டம்பிங்கில் அவர் செய்ததை பார்த்து நான் தனிப்பட்ட முறையில் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன் எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.