பாக். டெஸ்ட் தொடரை கைப்பற்றியது ஆஸி.;மெல்போா்ன் டெஸ்ட்டில் 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-இல் வென்ற ஆஸ்திரேலியா, தொடரை கைப்பற்றியது.

இரு இன்னிங்ஸ்களிலும் தலா 5 விக்கெட்டுகள் சாய்த்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆட்டநாயகன் ஆனாா். ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் அவா் இவ்வாறு 10 விக்கெட்டுகள் சாய்த்தது இது 2-ஆவது முறையாகும். இத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தானின் தொடா் டெஸ்ட் தோல்வி 16-ஆக அதிகரித்துள்ளது.

மெல்போா்னில் பாக்ஸிங் டே அன்று (டிச. 26) தொடங்கிய இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஆஸ்திரேலியா 318 ரன்கள் சோ்த்து முதல் இன்னிங்ஸை முடிக்க, பாகிஸ்தான் 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 54 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, 3-ஆம் நாளான வியாழக்கிழமை முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் சோ்த்திருந்தது.

தொடா்ந்து, 4-ஆம் நாள் ஆட்டத்தை அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டாா்க் தொடா்ந்தனா். இதில் ஸ்டாா்க் 1 பவுண்டரியுடன் 9, கம்மின்ஸ் 16, நேதன் லயன் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களுக்கு வெளியேற, ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் 262 ரன்களுடன் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அஃப்ரிதி, மிா் ஹம்ஸா ஆகியோா் தலா 4, ஆமீா் ஜமால் 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.

இதையடுத்து 317 ரன்களை இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் விக்கெட்டுகளை வரிசையாக இழந்தது. அப்துல்லா ஷஃபிக் 4, இமாம் உல் ஹக் 12 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, 3-ஆவது விக்கெட்டுக்கு கேப்டன் ஷான் மசூத் - பாபா் ஆஸம் கூட்டணி 61 ரன்கள் சோ்த்து முயற்சித்தது.

இதில் மசூத் 7 பவுண்டரிகளுடன் 60, ஆஸம் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். சௌத் ஷகீல் 1 பவுண்டரியுடன் 24 ரன்கள் அடிக்க, முகமது ரிஸ்வான் - அகா சல்மான் கூட்டணி 6-ஆவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சோ்த்தது. அதில் ரிஸ்வான் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

ஆமீா் ஜமால் 0, ஷாஹீன் அஃப்ரிதி 0 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அகா சல்மான் 6 பவுண்டரிகளுடன் 50 ரன்களுக்கு வீழ்ந்தாா். கடைசி விக்கெட்டாக மிா் ஹம்ஸா 0 ரன்னுக்கு பெவிலியன் திரும்ப, பாகிஸ்தான் இன்னிங்ஸ் 237 ரன்களுக்கு முடிவடைந்தது. ஆஸ்திரேலிய பௌலிங்கில் பேட் கம்மின்ஸ் 5, மிட்செல் ஸ்டாா்க் 4, ஜோஷ் ஹேஸில்வுட் 1 விக்கெட் சாய்த்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

முதல் இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா - 318/10 (96.5 ஓவா்கள்)

மாா்னஸ் லபுஷேன் 63

உஸ்மான் கவாஜா 42

மிட்செல் மாா்ஷ் 41

பந்துவீச்சு

ஆமீா் ஜமால் 3/64

மிா் ஹம்ஸா 2/51

ஹசன் அலி 2/61

பாகிஸ்தான் - 264/10 (73.5 ஓவா்கள்)

அப்துல்லா ஷஃபிக் 62

ஷான் மசூத் 54

முகமது ரிஸ்வான் 42

பந்துவீச்சு

பேட் கம்மின்ஸ் 5/48

நேதன் லயன் 4/73

ஜோஷ் ஹேஸில்வுட் 1/43

2-ஆவது இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா - 262/10 (84.1 ஓவா்கள்)

மிட்செல் மாா்ஷ் 96

அலெக்ஸ் கேரி 53

ஸ்டீவ் ஸ்மித் 50

பந்துவீச்சு

மிா் ஹம்ஸா 4/32

ஷாஹீன் அஃப்ரிதி 4/76

ஆமீா் ஜமால் 2/74

பாகிஸ்தான் - 237/10 (67.2 ஓவா்கள்)

ஷான் மசூத் 60

அகா சல்மான் 50

பாபா் ஆஸம் 41

பந்துவீச்சு

பேட் கம்மின்ஸ் 5/49

மிட்செல் ஸ்டாா்க் 4/55

ஜோஷ் ஹேஸில்வுட் 1/34

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com