டபிள்யூபிஎல்: ஏலம் நிறைவடைந்தது! 

மகளிா் ப்ரீமியா் லீக் (டபிள்யுபிஎல்) ஏலம் முடிவடைந்துள்ளது. 
டபிள்யூபிஎல்: ஏலம் நிறைவடைந்தது! 

முதன்முதலாக மகளிா் ப்ரீமியா் லீக் (டபிள்யுபிஎல்) போட்டியை நடத்த பிசிசிஐ தீா்மானித்துள்ளது. மொத்தம் 5 அணிகள் இதில் இடம் பெறுகின்றன. இந்த அணிகளின் ஏலம் மூலம் பிசிசிஐக்கு ரூ.4,670 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதன் செயலாளா் ஜெய் ஷா கூறியுள்ளாா். கடந்த 2008-இல் ஆடவா் ஐபிஎல் தொடா் தொடங்கப்பட்ட போது கிடைத்த தொகையை விட இது அதிகம் ஆகும்.

டபிள்யூபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

டபிள்யூபிஎல் வீராங்கனைகளுக்கான ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 15 முதல் 18 வீராங்கனைகளைத் தேர்வு செய்து கொள்ளலாம். எனவே அதிகபட்சமாக 90 வீராங்கனைகள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள். ஒவ்வொரு அணியும் 6 வெளிநாட்டு வீராங்கனைகளைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

இன்று நடைபெற்ற ஏலத்தில் ஸ்மிருதி மந்தனா ஆர்சிபி அணிக்காக ரூ.3.42 கோடிக்கு தேர்வாகி முதலிடம் பிடித்தார். 

ஆர்சிபி: மொத்தம் 18 வீராங்கனைகள் தேர்வு. வெளிநாட்டு வீராங்கனைகள்: 6. இவ்வணியில் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர்: ஸ்மிருதி மந்தனா (ரூ.3.42 கோடி). மீதமுள்ள தொகை- ரூ.10 இலட்சம். 

மும்பை இந்தியன்ஸ்: மொத்தம் 18 வீராங்கனைகள் தேர்வு. வெளிநாட்டு வீராங்கனைகள்: 6. இவ்வணியில் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் - நாட் சிவர்-பிரண்ட் - ரூ.3.2 கோடி. மீதமுள்ள தொகை- இல்லை. 

குஜராத் ஜெயண்ட்ஸ்: மொத்தம் 18 வீராங்கனைகள் தேர்வு. வெளிநாட்டு வீராங்கனைகள்: 6. இவ்வணியில் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் - கார்ட்னர் - ரூ.2.6 கோடி. மீதமுள்ள தொகை-ரூ. 5 இலட்சம்.

உ.பி. வாரியஸ்: மொத்தம் 18 வீராங்கனைகள் தேர்வு. வெளிநாட்டு வீராங்கனைகள்: 6. இவ்வணியில் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் -  தீப்தி சர்மா - ரூ.3.2 கோடி. மீதமுள்ள தொகை- இல்லை.

தில்லி கேபிடல்ஸ்: மொத்தம் 18 வீராங்கனைகள் தேர்வு. வெளிநாட்டு வீராங்கனைகள்: 6. இவ்வணியில் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் -  ஜெமிமா ரோட்ரிகஸ் - ரூ.2.2 கோடி. மீதமுள்ள தொகை- ரூ.35 இலட்சம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com