இந்திய ஒருநாள் அணி: நீக்கப்பட்ட மூன்று வீரர்கள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பரத்
பரத்
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 4 டெஸ்டுகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா முதல் ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே பங்கேற்க மாட்டார். அந்த ஆட்டத்தில் இந்திய அணியை பாண்டியா வழிநடத்துவார். 

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாத கே.எல். ராகுல், அக்‌ஷர் படேல் ஆகியோர் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 2022 இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்குப் பிறகு ஜடேஜாவும் 2013-க்குப் பிறகு உனாட்கட்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார்கள். காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் விளையாடாத ஷ்ரேயஸ் ஐயரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இடம்பெற்ற ரஜத் படிதார், கே.எஸ். பரத், ஷாபாஸ் அஹமது ஆகியோர் வாய்ப்பளிக்கப்படாமலேயே அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். ஷாபாஸ் அஹமது கடந்த வருடம் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com