நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டெஸ்ட் தொடர்: டேவிட் வார்னர் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பிரபல ஆஸி. பேட்டர் டேவிட் வார்னர் விலகியுள்ளார்.

News image
Updated On :21 பிப்ரவரி 2023, 6:18 am

DIN

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பிரபல ஆஸி. பேட்டர் டேவிட் வார்னர் விலகியுள்ளார்.

தில்லியில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னருக்குக் காயம் ஏற்பட்டது. முதல் இன்னிங்ஸில் விளையாடிய வார்னர், 15 ரன்களில் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். சிராஜ் வீசிய பந்து, வார்னரின் தலைக்கவசத்தில் பட்டது. பிறகு சிராஜின் மற்றொரு பந்து, முழங்கையைத் தாக்கியது. இதனால் மைதானத்திலேயே வார்னருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் ஆட்டமிழந்த பிறகு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தேர்ச்சி அடையாததால் 2-வது டெஸ்டிலிருந்து வார்னர் விலகினார். வார்னருக்குப் பதிலாக ஆஸி. அணியில் மாற்று வீரராக ரென்ஷா சேர்க்கப்பட்டார். 2-வது இன்னிங்ஸில் அவர் தான் பேட்டிங் செய்தார்.

இந்நிலையில் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வார்னர் விலகியுள்ளார். சிகிச்சைக்காக உடனடியாகக் குடும்பத்தினருடன் சிட்னிக்குச் செல்லும் வார்னர், டெஸ்ட் தொடருக்குப் பிறகு நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

3-வது டெஸ்டில் வார்னருக்குப் பதிலாக டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராகக் களமிறங்கவுள்ளார். டெஸ்ட் தொடரிலிருந்து வார்னர், ஹேசில்வுட் என முக்கிய வீரர்கள் விலகியிருப்பது ஆஸி. அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்துமா என்பது இனிமேல் தான் தெரிய வரும். 

டெஸ்ட் தொடரில் 2-0 என இந்திய அணி முன்னணியில் உள்ள நிலையில் 3-வது டெஸ்ட், மார்ச் 1 அன்று தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.