மார்டினா நவரத்திலோவாவுக்குப் புற்றுநோய் பாதிப்பு!

பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவரத்திலோவா தொண்டை மற்றும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மார்டினா நவரத்திலோவாவுக்குப் புற்றுநோய் பாதிப்பு!

பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவரத்திலோவா தொண்டை மற்றும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

1970களின் இறுதி முதல் 1980கள் முழுக்க டென்னிஸ் விளையாட்டில் தன்னிகரற்ற வீராங்கனையாக இருந்தார் மார்டினா நவரத்திலோவா. ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 18 பட்டங்களையும் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 31 பட்டங்களையும் வென்றவர். ஒற்றையர் பிரிவில் 9 விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்தார். இதுவரை ஆடவர், மகளிர் பிரிவில் வேறு யாரும் இத்தனை விம்பிள்டன் பட்டங்களை வென்றதில்லை. 332 வாரங்களுக்கு நெ.1 வீராங்கனையாக இருந்தார். செக்கோஸ்லோவாக்கியா நாட்டில் பிறந்த மார்டினா, 1981-ல் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றார். 

இந்நிலையில் தொண்டை மற்றும் மார்பகப் புற்றுநோயால் மார்டினா நவரத்திலோவா பாதிக்கப்பட்டுள்ளார். 2010-ல் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டாலும் தீவிர சிகிச்சையால் அதன் பாதிப்பு குறைந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது தொண்டை மற்றும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மார்டினா நவரத்திலோவாவுக்கு விரைவில் சிகிச்சை தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

66 வயது மார்டினா நவரத்திலோவா ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் வர்ணனையாளராகப் பணியாற்ற இருந்த நிலையில் தற்போது புற்றுநோய்க்கான சிகிச்சையில் அதிகக் கவனம் செலுத்தவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com