தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றில் விளையாட இந்தியா என்ன செய்ய வேண்டும்?

ஆஸ்திரேலிய அணிக்கு இறுதிச்சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது...

News image
Updated On :9 ஜனவரி 2023, 9:35 am

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.

இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் புள்ளிகள் பட்டியலில் 75.56% புள்ளிகளுடன் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு இறுதிச்சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதையும் தாண்டி ஆபத்து ஏதாவது உள்ளதா?

இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியா தோற்று நியூசிலாந்தில் விளையாடும் இலங்கை அணி இரு டெஸ்டுகளையும் வென்றால் மட்டுமே ஆஸி. அணியின் வாய்ப்பு பறிபோகும். 

இந்தியாவின் நிலைமை எப்படி உள்ளது?

சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது இந்திய அணி. இதனால் 58.93% புள்ளிகளுடன் இந்தியாவின் வாய்ப்பும் அதிகமாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என இந்திய அணி வென்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். 

4-0 என இந்தியா வென்றால் 68.06% புள்ளிகளும் 3-1 என வென்றால் 62.5% புள்ளிகளும் கிடைக்கும். ஒருவேளை டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிவடைந்தால்?

இந்தியா 2-2 என டெஸ்ட் தொடரைச் சமன் செய்துவிட்டால், இலங்கை அணி நியூசிலாந்தில் 2-0 என வென்றால் இந்தியாவால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியாது. இந்திய அணி 1-1 எனத் தொடரை டிரா செய்து, தென்னாப்பிரிக்க அணி, சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளை 2-0 என வென்றாலும் வாய்ப்பு கிட்டாது. 

எதற்கு வம்பு,  இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றுவிட்டால் எந்தச் சிக்கலும் இல்லாமல் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.