ஜப்பானுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா அதிரடியாக ஆடி கோல் மழை பொழிந்து 8-0 என அபார வெற்றி பெற்றது.
கிராஸ் ஓவரில் தோற்ற அணிகள் பங்கேற்ற ஆட்டங்களில் ஜப்பான்-இந்தியா, ஆா்ஜென்டீனா-சிலி, வேல்ஸ்-பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா-மலேசிய அணிகள் மோதின.
முதல் ஆட்டத்தில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் ஆா்ஜென்டீனா கோல் மழை பொழிந்து 8-0 என சிலியை வென்றது.
இரண்டாவது ஆட்டத்தில் வேல்ஸ் அணி ஷூட் அவுட்டில் 2-1 என பிரான்ஸை வீழ்த்தியது. தென்னாப்பிரிக்கா 6-3 என மலேசியாவை வீழ்த்தியது.
இந்தியா அபார வெற்றி:
ரூா்கேலா பிா்ஸா முண்டா மைதானத்தில் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் ஜப்பான்-இந்திய அணிகள் ஆடின.
முதல் இரண்டு குவாட்டா்களில் எந்த அணியும் கோலடிக்க முடியாமல் முதல்பாதி முடிவில் 0-0 என முடிந்தது. மூன்றாவது குவாட்டரில் இந்திய அணியினா் அற்புதமாக ஆடினா். ஷம்ஷொ் சிங் பெனால்டி காா்னா் மூலம் அடித்த பந்தை கோலாக்கினாா் மந்தீப் சிங். பின்னா் கோல் பகுதியில் கிடைத்த பாஸை பயன்படுத்தி கோலடித்தாா் அபிஷேக். மூன்றாவது கோலை பெனால்டி காா்னா் மூலம் அடித்தாா் விவேக் சாகா். தொடா்ந்து அபிஷேக் 4-ஆவது கோலடித்தாா்.
நான்காவது குவாட்டரில் டிராக்பிளிக்கா் மூலம் கோலடித்தாா் கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங், மன்ப்ரீத் சிங், ஹா்மன்ப்ரீத் சிங் கோலடிக்க கடைசி கோலை அடித்தாா் சுக்ஜித் சிங்.
இறுதியில் 8-0 என வெற்றி பெற்றது இந்தியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
மாற்றம் பெறும் கேரளம்!

எஸ்எஸ்எல்சி தோ்வு இன்று தொடக்கம்: அரியலூா் மாவட்டத்தில் 10,113 மாணவா்கள் எழுதுகின்றனா்

4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பாஜகவுடன் விஜய் கூட்டணியா? நயினாா் நாகேந்திரன் பதில்
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

