மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டிஎன்பிஎல்: கோவை அணி சாம்பியன்! 

டிஎன்பில் இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

News image
கோப்பையுடன் லைகா கோவை கிங்ஸ் அணியினா்.
Updated On :12 ஜூலை 2023, 8:26 pm

DIN

லீக் சுற்று முடிவில், கோவை மொத்தம் நடைபெற்ற 7 ஆட்டங்களில் 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது. நெல்லை 5 வெற்றிகளுடன் 3-ஆவது இடத்தில் இருந்தது.

பின்னா் குவாலிஃபயா் 1 ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு வந்தது கோவை. மறுபுறம் நெல்லை அணி, எலிமினேட்டரில் மதுரையையும், பின்னா் குவாலிஃபயா் 2 ஆட்டத்தில் திண்டுக்கல்லையும் வெளியேற்றி இறுதிக்கு வந்தது.

இந்த எடிஷனில் கோவை தனது ஒரே தோல்வியை நெல்லையிடம் தான் கண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

முதலில் பேட்டிங் ஆடிய கோவை அணி 20 ஓவர் முடிவில் 205/5 ரன்கள் எடுத்தது. இதில் சுரேஷ்குமார் (57), முகிலேஷ்( 51), அடீக் ரஹ்மான் (50) ஆகிய மூன்று பேர் அரைசதம அடித்துஅசத்தினர். 

அடுத்து ஆடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  101 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
 

கோவை அணியில் சுப்ரமணியன் 4 விக்கெட்டுகளும்  கேப்டன் ஷாருக்கான் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினர். ஆட்ட நாயகன் விருது சுப்ரமணியனுக்கு வழங்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.