
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கெனிங்டன் ஓவலில் இன்று (ஜூலை 27) தொடங்கியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸாக் கிராலி மற்றும் பென் டக்கெட் சீரான தொடக்கத்தைத் தந்த போதிலும், கிராலி 22 ரன்களிலும், பென் டக்கெட் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின், மொயின் அலி மற்றும் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தனர். ஜோ ரூட் நீண்ட நேரம் களத்தில் நிலைக்கவில்லை. அவர் 5 ரன்களில் ஹேசில்வுட் வீசிய பந்தில் போல்டானார். அதன்பின், ஹாரி ப்ரூக் களமிறங்கினார். ஒருபுறம் மொயின் அலி நிதானமாக ரன்களை சேர்க்க ஹாரி ப்ரூக் அதிரடி காட்டினார்.
உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்திருந்தது. மொயின் அலி 10 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.