பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆஷஸ் கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா!

ஆஷஸ் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா தேநீர் இடைவேளையின்போது 186 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்ஸில் தடுமாறி வருகிறது.

News image
Updated On :28 ஜூலை 2023, 3:13 pm

DIN

ஆஷஸ் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா தேநீர் இடைவேளையின்போது 186 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்ஸில் தடுமாறி வருகிறது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 85 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. ஆட்டத்தின் இரண்டாம் நாளான இன்று (ஜூலை 28) தேநீர் இடைவேளையின்போது 186 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறி வருகிறது. ஸ்டீவ் ஸ்மித் 40 ரன்களுடனும், பாட் கம்மின்ஸ் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 

ஆஸ்திரேலியா இங்கிலாந்தைக் காட்டிலும் 97 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.