தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடைசி ஆஷஸ் போட்டி: ஆஸி. வெற்றி பெற 384 ரன்கள் இலக்கு! 

ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் 5வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 384 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :30 ஜூலை 2023, 10:59 am

DIN

கடைசி மற்றும் 5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய ஆஸி. அணி 295 ரன்களுக்கு ஆட்டமிழக்க இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பேஸ்பால் கிரிக்கெட்டினை விளையாடி 395 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஆஸி. அணிக்கு இலக்காக 384 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஜோ ரூட் 91 ரன்கள் எடுத்து அசத்தினார். பெயர்ஸ்டோ 78 ரன்களும் ஜாக் க்ராவ்லி 73 ரன்களும் டக்கெட், ஸ்டோக்ஸ் தலா 42 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். ஆஸி. அணி சார்பில் ஸ்டார்க், டாட் மர்ஃபி தலா 4  விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். 

இன்று மற்றும் நாளை என இரண்டு நாளில் ஆஸி. அணி 384 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம். இங்கிலாந்து அணி ஆஸி. அணியை 383 ரன்களுக்குள்ளாக ஆல் அவுட் செய்தால் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் இந்த இரண்டும் நடக்கவில்லையெனில் ஆட்டம் டிராவில் முடிவடையும்.

இந்த ஆஷஸ் தொடரில் ஏற்கனவே 2-1 என ஆஸி. அணி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது ஆஸி. அணி 8 ஓவர் முடிவில் 31 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர்-11* , கவாஜா -18* ரன்களுடன் களத்தில் விளையாடி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.