எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை: 10 வருடமாக ஐசிசி கோப்பை வெல்லாதது குறித்து டிராவிட் கருத்து! 

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 வருடமாக எந்த விதமான ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை: 10 வருடமாக ஐசிசி கோப்பை வெல்லாதது குறித்து டிராவிட் கருத்து! 

இந்திய கிரிக்கெட் அணி 3 முறை ஐசிசி உலக்கோப்பையை வென்றுள்ளது. 1983இல் ஒருநாள் போட்டியிலும், 2007இல் டி20 உலகக் கோப்பையும், 2011இல் மீண்டும் ஒருநாள் கோப்பைகளையும் வென்றது. மேலும் 2013இல் தோனி தலைமையில் 2013இல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. 

இந்திய அணி கடந்த 10 வருடமாக எந்த விதமான ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாக் அவுட் போட்டிகள் வரை சென்றாலும் கோப்பையை வெல்ல முடியாத சோகம் நிலவி வருகிறது. 

நாளை நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெல்லுமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது: 

ஐசிசி கோப்பை வெல்ல வேண்டுமென எங்களுக்கு எந்தவிதமான அழுத்தமும் இல்லை. வென்றால் நன்றாகத்தான் இருக்கும். இரண்டு வருட கடின உழைப்பிற்கு கிடைத்த பலனாக இந்த வெற்றி இருக்கும். 

ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவதும் டிரா செய்வதும் எளிமையான விஷயமில்லை. ஆஸி. அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கட்ந்த் 5,7 ஆண்டுகளாக இந்திய அணி எல்லோரிடமும் சிறப்பான போட்டியை விளையாடியுள்ளது. நீங்கள் ஐசிசி கோப்பை வைத்திருந்தாலும் வைக்காவிட்டாலும் இது எதுவும் மாறப்போவதில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com