நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் மொயின் அலி: ஆஷஸ் தொடரில் சேர்ப்பு!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி, தனது முடிவை திரும்பப் பெற்றுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :7 ஜூன் 2023, 7:49 am

DIN


டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி, தனது முடிவை திரும்பப் பெற்றுள்ளார்.

2014 முதல் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் தொடர்களில் விளையாடி வரும் மொயின் அலி, கடந்த 2021-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் மெக்கலமுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு மொயின் அலி, தனது முடிவை திரும்பப் பெறுவதாக தெரிவித்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜூன் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரிலும் மொயின் அலி சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆல்-ரவுண்டர் மொயின் அலியின் வருகை இங்கிலாந்து அணிக்கு பலம் சேர்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.