ஆப்கானிஸ்தானை 546 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெஸ்டில் புதிய சாதனை படைத்த வங்கதேசம்!

ஆப்கானிஸ்தானை 546 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் புதிய சாதனையை படைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானை 546 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெஸ்டில் புதிய சாதனை படைத்த வங்கதேசம்!

ஆப்கானிஸ்தானை 546 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் புதிய சாதனையை படைத்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வங்கதேசம்  அதிக ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணியை வீழ்த்துவது இதுவாகும். ஒட்டுமொத்த டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் வரிசையில் மூன்றாமிடம் பிடித்து வங்கதேசம் சாதனை படைத்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு 662 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை எட்ட முடியாமல் ஆப்கானிஸ்தான் 115 ரன்களுக்கே தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேசதம் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய டஸ்கின் அகமது 37 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் டஸ்கின் அகமதின் சிறப்பான பந்துவீச்சு இதுவாகும். 

முன்னதாக வங்கதேசம் இரண்டு இன்னிங்ஸிலும் பெரிய அளவிலான ஸ்கோரை எடுக்க நஜ்முல் ஹூசைனின் இரண்டு சதங்கள் உதவியாக இருந்தது. இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த நஜ்முல் ஒரு போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த இரண்டாவது வங்கதேச வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

இதற்கு முன்னதாக கடந்த 2005 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே வங்கதேசம் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக இருந்தது.

ஒட்டு மொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 1928 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை 675 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதும், ஆஸ்திரேலியா இங்கிலாந்தை 562 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதும் அதிக ரன்களில் ஒரு அணியை வீழ்த்தியதில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. அந்த வரிசையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 546 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியின் மூலம் வங்கதேசம் மூன்றாவதாக இணைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com