ஆஷஸ் 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வலுவான தொடக்கம்!
ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் தேநீர் இடைவேளையின்போது ஒரு விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி வலுவான தொடக்கத்தைத் தந்துள்ளது.


ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் தேநீர் இடைவேளையின்போது ஒரு விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி வலுவான தொடக்கத்தைத் தந்துள்ளது.
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (ஜூன் 28) முதல் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 110 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸாக் கிராலி மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய ஸாக் கிராலி 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின் பென் டக்கெட்டுடன் ஜோடி சேர்ந்தார் ஆலி போப். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய பென் டக்கெட் அரைசதம் அடித்து அசத்தினார். 30 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 145 ரன்கள் குவித்து வலுவாக உள்ளது. பென் டக்கெட் 62 ரன்களுடனும், ஆலி போப் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் படிக்க: இன்ஸ்டாகிராமில் ரிஷப் பந்த் உருக்கமான பதிவு!
இங்கிலாந்து ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 271 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...