இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சதம் விளாசிய ஸ்மித்: முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழந்தது.

News image
Updated On :29 ஜூன் 2023, 2:16 pm

DIN

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (ஜூன் 28) முதல் தொடங்கியது. முதலில் பேட் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஸ்டீவன் ஸ்மித் 85  ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று (ஜூன் 29) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அலெக்ஸ் கேரி 22 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய மிட்செல் ஸ்டார்க் 6 ரன்களில் ஆட்டமிழக்க பாட் கம்மின்ஸ் களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் சதமடித்து அசத்தினார். அவர் 184 பந்துகளில் 110 ரன்கள் குவித்தார். அதில் 15 பவுண்டரிகள் அடங்கும். அதன்பின் களமிறங்கிய நாதன் லயன் 7 ரன்களிலும், ஹேசில்வுட் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி 416 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக  பந்துவீசிய ஜோஷ் டங் மற்றும் ராபின்சன் தலா 3  விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜோ ரூட் 2 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.