டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கோலாகலமாகத் தொடங்கிய டபிள்யூபிஎல்!

மகளிருக்கான டபிள்யூபிஎல் போட்டிகள் இன்று (மார்ச் 4) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.  

News image
Updated On :4 மார்ச் 2023, 2:06 pm

DIN

மகளிருக்கான டபிள்யூபிஎல் போட்டிகள் இன்று (மார்ச் 4) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. 

ஆடவருக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு முதல் பெண்களுக்கான டபிள்யூபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.

அதன்படி, இந்த ஆண்டு டபிள்யூபிஎல் போட்டிகளில் விளையாடும் வீராங்கனைகளுக்கான ஏலம் நடத்தப்பட்டு ஒவ்வொரு அணியினரும் தங்களுக்கான வீராங்கனை ஏலத்தில் எடுத்தனர். இதனையடுத்து, டபிள்யூபிஎல் தொடங்கும் நாளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று (மார்ச் 4) டபிள்யூபிஎல் போட்டிகள் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்தத் தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்களான கியாரா அத்வானி மற்றும் கிரித்தி சனோன் பங்குபெறும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன.

அதேபோல, ரசிகர்களின் செவிகளுக்கு விருந்தளிக்கும் விதமாக பிரபல பாடகர் ஏ.பி.தில்லான் அவர்களின் இசைக் கச்சேரியும் நடைபெறுகிறது.

டபிள்யூபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.