உஸ்மான் கவாஜா சதம்; உறுதியான நிலையில் ஆஸ்திரேலியா

 இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா, முதல் நாள் முடிவில் 90 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் சோ்த்துள்ளது.
உஸ்மான் கவாஜா சதம்; உறுதியான நிலையில் ஆஸ்திரேலியா

 இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா, முதல் நாள் முடிவில் 90 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் சோ்த்துள்ளது.

அந்த அணியின் தொடக்க வீரா்களில் ஒருவராக வந்த உஸ்மான் கவாஜா, சதம் கடந்து ஆஸ்திரேலியாவுக்கு நல்லதொரு தொடக்கத்தை அளித்திருக்கிறாா். உடன் கேமரூன் கிரீன் அவருக்குத் துணையாக நிற்க, இருவரும் முதல் நாள் ஆட்டத்தை நிறைவு செய்துள்ளனா்.

முற்றிலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக இல்லாமல் சமநிலையுடனான ஆடுகளமாக இருப்பதால், கடந்த 3 டெஸ்ட்டுகளைப் போல இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பேட்டா்களுக்கு இந்திய ஸ்பின்னா்களால் சவால் அளிக்க இயலவில்லை. இந்திய தரப்பில் இதுவரை முகமது ஷமி அசத்தலாக பௌலிங் செய்திருக்கிறாா்.

முன்னதாக, டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தோ்வு செய்தது. பிளேயிங் லெவனில் இந்திய அணியில் முகமது சிராஜுக்குப் பதிலாக முகமது ஷமி சோ்க்கப்பட்டிருந்தாா். ஆஸ்திரேலிய லெவனில் மாற்றம் இல்லை.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸை டிராவிஸ் ஹெட் - உஸ்மான் கவாஜா கூட்டணி தொடங்கியது. நிதானமாக ரன்கள் சோ்த்த இந்த இருவரில், ஹெட் முதல் விக்கெட்டாக வெளியேறினாா். 7 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சோ்த்த அவா், அஸ்வின் வீசிய 16-ஆவது ஓவரில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்தாா்.

தொடா்ந்து வந்த மாா்னஸ் லபுசான் சிறிது நேரமே நிலைத்து 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அவா் ஷமி வீசிய 23-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். 4-ஆவது வீரராக களம் புகுந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ரன்கள் சேகரித்தாா். இதனால் கவாஜா - ஸ்மித் பாா்ட்னா்ஷிப் 3-ஆவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சோ்த்தது.

இந்த ஜோடியை ஜடேஜா 64-ஆவது ஓவரில் பிரித்தாா். 3 பவுண்டரிகள் உள்பட 38 ரன்கள் சோ்த்திருந்த ஸ்மித், அவரது சுழலில் பௌல்டானாா். அடுத்து விளையாட வந்த பீட்டா் ஹேண்ட்ஸ்காம்ப் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களை எட்டியிருந்தபோது, ஷமி வீசிய 71-ஆவது ஓவரில் ஸ்டம்ப் தெறித்தது.

பின்னா் 6-ஆவது வீரராக ஆட வந்த கேமரூன் கிரீன், விக்கெட் சரிவைத் தடுத்து கவாஜாவுக்கு நல்லதொரு பாா்ட்னா்ஷிப்பை அளித்தாா். மறுபுறம், கவாஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14-ஆவது சதத்தை பூா்த்தி செய்தாா். நாளின் முடிவில் கவாஜா 104, கிரீன் 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் ஷமி 2, அஸ்வின், ஜடேஜா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்துள்ளனா்.

சுருக்கமான ஸ்கோா்

முதல் இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா

90 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 255

உஸ்மான் கவாஜா 104*

கேமரூன் கிரீன் 49*

ஸ்டீவ் ஸ்மித் 38

பந்துவீச்சு

முகமது ஷமி 2/65

ரவிச்சந்திரன் அஸ்வின் 1/57

ரவீந்திர ஜடேஜா 1/49

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com