பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அஸ்வினுக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாகப் பந்துவீசி தரவரிசையில் நெ.1  இடம் பிடித்த ஆர். அஸ்வினுக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :16 மார்ச் 2023, 10:23 am

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாகப் பந்துவீசி தரவரிசையில் நெ.1  இடம் பிடித்த ஆர். அஸ்வினுக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றுள்ளது. ஆமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ் டிரா ஆனது. ஆமதாபாத் டெஸ்டில் சதமடித்த விராட் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருக்கும் தொடர் நாயகன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின், ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். 

இந்நிலையில் தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா்  உதயநிதி ஸ்டாலின், ட்விட்டரில் அஸ்வினைப் பாராட்டி எழுதியதாவது:

தமிழ்நாட்டின் பெருமைக்குரிய அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் நெ.1 பந்துவீச்சாளராகி நமக்குப் பெருமை சேர்த்துள்ளார். தகுதிக்குரிய மரியாதை. இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பை இது வெளிப்படுத்துகிறது. சிறப்புமிக்க அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இன்னும் பல பெருமைகள் தேடி வரும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.