உலகக் கோப்பையில் முதல்முறையாக விக்கெட் வீழ்த்தினார் விராட் கோலி!

உலகக் கோப்பையில் முதல்முறையாக விக்கெட் வீழ்த்தினார் விராட் கோலி!

தனது முதல் உலகக் கோப்பை விக்கெட்டை நெதர்லாந்துக்கு எதிராக இன்று (நவம்.12) கைப்பற்றினார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நெதர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தனது முதல் ஒருநாள் உலகக் கோப்பை விக்கெட்டை வீழ்த்தினார்.

24.3வது ஓவரில் நெதர்லாந்து வீரர் ஸ்காட் எட்வர்ட்ஸை வெளியேற்றி தனது முதல் விக்கெட்டை கோலி பதிவு செய்தார்.

விராட் கோலி வீசிய பந்தில் எட்வர்ட்ஸ் அடிக்க முயற்சித்தார். அதனை கே.எல்.ராகுல் கேட்ச் பிடித்ததை தொடர்ந்து எட்வர்ட்ஸ் அவுட் ஆனார்.

ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் விராட் கோலி தனது முதல் விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். கோலி கடைசியாக 2016 டி20 உலகக்கோப்பையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சர்வதேச விக்கெட்டை வீழ்த்தினார்.

அதையடுத்து, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கோலி 50 ஓவர் போட்டியில் ஒரு விக்கெட்டை எடுத்துள்ளார்.

ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் மற்றும் டி20யில் நான்கு விக்கெட்டுகள் என மொத்தமாக 9 விக்கெட்டுகளை மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் வீழ்த்தியுள்ளார் விராட் கோலி.

நெதர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்ற 9 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com