நடப்பு உலகக் கோப்பைத் தொடர் உலகக் கோப்பை வரலாற்றில் மிக அதிகமான பார்வையாளர்களை மைதானத்துக்கு வரவழைத்துள்ளது.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பைத் தொடர் நேற்று முன் தினம் (நவம்பர் 19) நிறைவு பெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இதையும் படிக்க: நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் வங்கதேச கிரிக்கெட் வீரர்!
இந்த நிலையில், நடப்பு உலகக் கோப்பைத் தொடர் அதிக அளவிலான பார்வையாளர்களை மைதானங்களுக்கு வரவழைத்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரை 12,50,307 பேர் மைதானத்துக்கு வந்து கண்டு களித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
â ICC (@ICC) November 21, 2023
Thank YOU to all of our fans who helped make #CWC23 the most attended yet
More https://t.co/4womT6R5rv pic.twitter.com/cqNwNlPPsp
நடப்பு உலகக் கோப்பைத் தொடர் கடந்த 2015 மற்றும் 2019 ஆண்டுகளில் நடத்தப்பட்ட உலகக் கோப்பைத் தொடரைக் காட்டிலும் அதிகமான பார்வையாளர்களை மைதானத்துக்கு வர வைத்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரை 10,16,420 பேரும், 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தப்பட்ட தொடரை 7,52,000 பேரும் மைதானத்துக்கு நேரில் வந்து பார்த்துள்ளனர்.
இதையும் படிக்க: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மோடி ஆறுதல்!(விடியோ)
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் மொத்தமாக 48 போட்டிகள் நடைபெற்ற நிலையில், ஒட்டுமொத்த போட்டிகளுக்குமான சராசரி பார்வையாளர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 26,000 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










